தற்பொழுது வங்கி மற்றும் அரசு உள்ளிட்ட பல சேவைகளும் தபால் நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாஸ்போர்ட் பதிவு மற்றும் விண்ணப்ப சேவைகளையும் இனி வாடிக்கையாளர்கள் தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
தபால் சேவைகள்:
பொதுவாக ஒருவர் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கு பாஸ்போர்ட் சேவ கேந்திராவுக்கு செல்ல வேண்டும். தவிர அதிகமான கால நேரங்களை செலவிட வேண்டியிருக்கும். இந்த சிக்கல்களை சரி செய்யும் வகையில் தற்பொழுது தபால் நிலையங்களும் பாஸ்போர்ட் பதிவு மற்றும் விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. அதனால் நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவுகளை செய்து கொள்ள முடியும்.
அதற்காக நீங்கள் தபால் அலுவலகத்தை அணுகியவுடன், பொதுவான சேவை மையத்துக்கு செல்லவும். அந்த மையத்திலேயே நீங்கள் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம் என இந்தியா போஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க சில முக்கிய நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விண்ணப்பங்களை மேற்கொள்ள முதலில் டோக்கன்களை பெற்றிருக்க வேண்டும். இந்த டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் வழங்குகிறது.
அதை பெற்றுக் கொள்ள முதலில் passportindia.gov.in என்ற இணையதளத்தில் பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்து விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். பின்னர் உங்கள் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தேதி கொடுக்கப்பட்டவுடன் ரசீது மற்றும் மற்ற அசல் ஆவணங்களின் நகலை எடுத்துக் கொண்டு தபால் நிலையங்களுக்கு செல்லவும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாட்கள் கழித்து பாஸ்போர்ட் குறித்த தகவல்கள் உங்களுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.