கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட JEE Advanced நுழைவுத்தேர்வு, கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் தற்போது அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
நுழைவுத் தேர்வு:
IIT தொழில்நுட்ப பயிலகத்தில் பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் JEE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த JEE Advanced நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நடைபெறுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை நடத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன் படி அனைத்து வகையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான JEE நுழைவுத் தேர்வை IIT கரக்பூர் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறும் சுமார் 2.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. T இது தவிர இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி, ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனம் அறிவியல் போன்ற கல்வி நிறுவனங்களில், JEE Advanced தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக JEE மெயின்ஸ் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், தகுதிச் சோதனையாக JEE Advanced கருதப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.