தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவுகள்:
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதமே தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் அனைவரும் periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளலாம். முதலில் பல்கலைக்கழகத்தின் periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
அதன் முகப்பு பக்கத்தில் ஏப்ரல் 2021 தேர்வுகள் UG/PG முடிவுகள் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
வலைதளத்தில் புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
பின்னர் உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.