தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: மத்திய கல்வித் துறை அமைச்சர
தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதன்கிழமை மாலை தில்லி சென்றார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை வியாழக்கிழமை சந்தித்த மா. சுப்பிரமணியன், இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: "நீட் தேர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்னைச் சந்தித்தார். இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் பின்னணி குறித்து அவரிடம் விளக்கினேன். மேலும் மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்பட்டு நீட் தேர்வு மொழிகளின் எண்ணிக்கை 11-இல் இருந்து 13-ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் அவரிடம் பகிர்ந்தேன். ஏற்கெனவே தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களின் வசதிக்காக நீட் தேர்வு நடத்த செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் என மேலும் 4 நகரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தகவலையும் அவரிடம் கூறினேன். கடந்தாண்டு 14 ஆக இருந்த தேர்வு நடைபெறும் நகரங்கள் 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களும் அதிகரிக்கப்படவுள்ளன."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.