ஜூலை 15 முதல் 8 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மஹாராஷ்டிரா அரசு உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

ஜூலை 15 முதல் 8 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மஹாராஷ்டிரா அரசு உத்தரவு!

கடந்த மாதத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாத பகுதிகளில் மட்டும் ஜூலை 15 ஆம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா புதிய பாதிப்பானது வீழ்ச்சியடைந்து வரும் பட்சத்தில் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகளின் அடுத்த கட்டமாக பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி கடந்த மாதத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் உருவாகாத பகுதிகளில் மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்த அவர், ‘மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தொலைதூர கற்றல் மற்றும் ஆன்லைன் வழிக்கல்வியை அரசு ஊக்குவித்து வருகின்ற வேளையில், கொரோனா பாதிப்புகள் இல்லாத கிராமப்புற பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்குவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலையின் சாத்தியக்கூறுகள் இருப்பதால், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் முறையாக அமல்படுத்துவதை கண்காணிக்க கிராம பஞ்சாயத்து தலைமையின் கீழ் எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, தலைமை நிர்வாக அதிகாரி மேற்பார்வையிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் பள்ளி அதிபர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பலர் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளிகள் அனைத்து கொரோனா தடுப்பு தொடர்பான இயக்க நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும், ஒரு வகுப்பில் 15 முதல் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews