தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – அரசிடம் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

1 Comments

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – அரசிடம் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகின்றனர். எனவே அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அரசு ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு ஆசிரியர்கள்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்புகளுக்கு சில தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பல மாணவர்கள் தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளுக்கு பயணம் செய்கிறார்கள். இதனால் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என காங்கேயம் சாலையிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் – அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் ஆசிரியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கூட்டத்தில் அரசு ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அனைத்து அரசு பள்ளிகளுக்கு தேவைப்படும் வசதிகளையும், பள்ளி உபகரண பொருள்களையும் முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், மகேந்திரன், பிரபு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்தி ஓய்வு வயதை 58 எனவும் அதிகபட்ச பணிக் காலத்தை 30 ஆண்டுகள் எனவும் செயல்படுத்தினால்....
    1. இளைய பணியாளர்களால பணிகள தோய்வில்லாமல் செவ்வன நடைபெறும்
    2. படித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் மாணவர்கள், இளைஞர்கள் என்ற வயதையும் கடந்து பெற்றோர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் எனவே இவர்களின் கனவு நினைவாகும். இவர்களின் பெற்றோர்கள் உழைத்து படிக்க வைத்த தனது வாரிசு வேலை போவதில் மனமகிழ்ந்துகண்ணை மூடுவார்கள்.
    இதை எழுதி அனுப்பியுள்ள நான் 41 வயதில் வேலைக்கிடைத்த ஒரு அரசு பள்ளி ஆசிரியன் தான்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews