Breaking

Saturday, July 10, 2021

தமிழகத்தில் ஜூலை 19 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்‌ தொற்று நிலையைக்‌ கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்‌ கொண்டு அனைத்து மாவட்டங்களிலும்‌ கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல்‌ 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

மாநிலங்களுக்கிடையே தனியார்‌ மற்றும்‌ அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

மத்திய உள்துறை அமைச்சகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்‌ தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

திரையரங்குகள்‌

அனைத்து மதுக்கூடங்கள்‌

நீச்சல்‌ குளங்கள்‌

பொது மக்கள்‌ கலந்து கொள்ளும்‌ சமுதாயம்‌, அரசியல்‌ சார்ந்த கூட்டங்கள்‌

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்‌

பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகள்‌

உயிரியல்‌ பூங்காக்கள்‌

நோய்த்‌ தொற்றை கட்டுப்படுத்தும்‌ விதமாக திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌. இறுதிச்‌ சடங்குகளில்‌, 20 நபர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌. நோய்‌ கட்டுப்பாட்டு பகுதிகள்‌ தவிர, அனைத்து பகுதிகளிலும்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகள்‌ 12- 7-2021 முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
மேலும்‌, பின்வரும்‌ கூடுதல்‌ செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படுகின்றன.

புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்‌ தேர்வுகள்‌ அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை தேர்வு நடத்தும்‌ அமைப்புகள்‌ முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம்‌ தெரிவிக்க வேண்டும்‌.

உணவகங்கள்‌, தேநீர்‌ கடைகள்‌, அடுமனைகள்‌, நடைபாதைக்‌கடைகள்‌, இனிப்பு, காரவகை பண்டங்கள்‌ விற்பனை கடைகள்‌ ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன்‌ இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog