மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR அதிகரிக்கையில், அவர்களின் PF மற்றும் Gratuity அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக 7 ஆவது ஊதியக்குழு தகவல் அளித்துள்ளது.
DA உயர்வு
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு (DA ) இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கொடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் இதுவரை வெளியான தகவலின் படி, ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது. மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வை மீட்டெடுக்கும் முயற்சியில், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். !
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கிடைக்கும் சேவைகள் விளக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 17% DA உயர்வை பெற்று வருகின்றனர். இதன் பின்பாக 2020 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர இருந்த 3% டிஏ உயர்வு, மற்றும் ஜூலை 1, 2020 க்கான 4% டிஏ உயர்வு, மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 4% டிஏ உயர்வு ஜூலை 1 முதல் அதிகரிக்கவுள்ளது. சமீபத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய DA மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான DR வழங்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் கூறியது. மேலும் ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் செலுத்த வேண்டிய DA மற்றும் DRன் கூடுதல் தவணைகளும் செலுத்தப்படாது என கூறப்பட்டது. இருப்பினும், தற்போதைய கட்டணத்தின் படி DA தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணைகளும் வருங்காலத்தில் மீட்டெடுக்கப்படும் என்றும் 2021 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள, ஒட்டு மொத்த திருத்தப்பட்ட விகிதத்தில் அவை அடங்கும் என்றும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இதில் அடிப்படை ஊதியம் மற்றும் DA வின் சதவீதத்துடன் PF பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. அதாவது DA அதிகரிப்பானது, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர PF பங்களிப்பையும் அதிகரிக்கும். எனவே DA உயர்வானது ஊழியர்களின் க்ராஜூவிட்டி அதிகரிக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.