சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும்முறை குறித்து முடிவெடுக்க, 13 உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை, மத்திய அரசு ரத்து செய்தது. பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ள நிலையில், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசனை நடத்த, மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலர் விபின் குமார் தலைமையில், 13 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எந்த முறையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது குறித்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, கமிட்டிக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.