சென்னையில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் அளிக்கும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கமானது அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றை தடுக்கும் வகையில் திமுக தலைமையிலான அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தவிர தமிழக அரசுடன் இணைந்து காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பல முன்கள பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரவும் ஆபத்துள்ள நேரத்திலும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளிகளில் அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களுக்கு வழங்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு மீண்டுமாக துவங்க உள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்கள் மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், ஜூன் 20 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அப்படி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.