நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுத்து வரும் காரணத்தினால் தேசிய அளவில் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடப்பாண்டில் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நுழைவுத்தேர்வு:
இந்தியாவில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட தற்போது இரண்டாம் அலையில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வினை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் முதல் அலையின் பொழுது கடந்த பிப்ரவரி மாதம் நிலவரப்படி தொற்றினால் 1.57 லட்ச பேர் உயிரிழந்தனர். ஆனால் இரண்டாம் அலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் 1.78 லட்ச பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டிய ராமதாஸ் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவிலான நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இது எந்த அளவிற்கு சீராக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் மாணவர்கள் மனதளவிலும், கல்வியளவிலும் தயாராக இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் நடப்பாண்டிற்கான நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.