தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்த இருந்து முடிவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி முதல் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்ததால் தேர்வுகள் முன்னதாக தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் பரவி வரும், இந்த சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்று பலரும் தெரிவித்து வந்தனர். பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. நேற்று அனைத்து சட்டபேரவை உறுப்பினர்களிடமும், எதிர்க்கட்சி தலைவரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்நிலையில் இன்று பகலில் தலைமை செயலகத்தில் இருந்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும், கல்வியாளர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் தேர்வை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தனர். பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிபாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார். அதிமுக கட்சி பெரும்பான்மை கட்சிகளின் முடிவிற்கு ஒப்புதல் அளித்தது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது ஆலோசனைக் கூட்டத்தின் அறிக்கையை இன்று மாலை 5:30 மணிக்கு முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்த இறுதி முடிவை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.