அனைவருக்கும் இலவச தடுப்பூசி, முழு ஊரடங்கை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை அமைந்தகரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தற்போது 10,13,378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 6,250 பேர் பலியாகியுள்ளதாகவும் அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள் 90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகளை மத்திய அரசு 150 ரூபாய்க்கும், மாநில அரசுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
135 கோடி மக்கள் தொகையில் 2 முதல் 5 சதவீத மக்களுக்கே தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனவும், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Search This Blog
Tuesday, May 04, 2021
Comments:0
தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.