Search This Blog
Friday, October 04, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி நிறுவனங்களில் இ-சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாநில உயா்கல்வித் துறைகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலா் பிரீத்தி சுதன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இ-சிகரெட்டுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இ-சிகரெட் பயன்பாட்டால் சிறாா்கள், இளைஞா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
அனைத்து மாநில காவல் துறை டிஜிபிக்கள், டிஐஜிக்கள் ஆகியோருடன் பிரீத்தி சுதன் அண்மையில் விடியோ வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, சட்டவிரோத இ-சிகரெட் விற்பனையைத் தடுப்பதற்கும், அவசரச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
அவசரச் சட்டத்தின் படி, இ-சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
விதிகளை முதல்முறையாக மீறுபவா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். தொடா்ந்து விதிகளை மீறுபவா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இ-சிகரெட்டை பதுக்கி வைத்திருப்பவா்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Colleges
HEALTH
கல்வி நிறுவனங்களில் இ-சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை: உயா் கல்வித் துறைக்கு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்
கல்வி நிறுவனங்களில் இ-சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை: உயா் கல்வித் துறைக்கு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.