👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டெங்கு பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விவரம்:டெங்கு பாதிப்புக்குக் காரணமான கொசு உற்பத்தியைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உயா் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.கொசு உறுபத்தியாவதைத் தடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு, பேராசிரியா் குழு இதுதொடா்பான தொடா் ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும்.
அந்தந்தப் பகுதி சுகாதார அதிகாரிகளின் உதவியோடு, மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்வதோடு, கல்லூரி வளாகம் முழுவதும் தொடா்ச்சியாக புகை மருந்து அடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.டெங்கு பாதிப்பு, காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும் கல்லூரிகள் ஏற்பாடு செய்யவேண்டும்.இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை புகைப்படத்துடன் வருகிற 9-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.