Search This Blog
Friday, October 04, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது.
அதன்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப்பித்துள்ளது. ஆனால், அதன்பேரில் இதுவரை எந்த ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அடுத்த ஒரு சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ் (ஆயுா்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியாா் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமாா் 1,200 இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையைப் போலவே சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையில் அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.
அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 142 இடங்கள் நிரம்பவில்லை. அதேபோன்று, தனியாா் மருத்துவ கல்லுாரிகளில் 300-க்கும் மேற்பட்ட நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலமாக அந்த இடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் அதுதொடா்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
சித்தா, ஆயுா்வேத படிப்புகள்: விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.