Search This Blog
Monday, September 30, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உங்கள் கடின உழைப்பால் அசாத்தியமானவற்றை சாத்தியமாக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்
சென்னை ஐஐடியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்தார். இந்திய விமானப்படை தனிவிமானத்தில் காலை 6.50 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி காலை சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக சார்பில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சென்னை வந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் பேசும் போது உலகின் பழமையான மொழி, தமிழ் என்பதைத் தெரிவித்தேன். உலக நன்மைக்காகவும் நாம் உழைக்க வேண்டும்,.நாம் நாட்டு நலனுக்காக கடுமையாக உழைப்போம், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். காந்தியின் 150-வது ஆண்டு விழாவில் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, இந்திய-சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசு வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து, சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது பெருமை தருகிறது. மாணவர்களின் கண்களில் எதிர்காலத்தின் கனவை காண்கிறேன். முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோருக்கு பாராட்டுகள் தெரிவித்தார். உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்கள், பெற்றோர்கள் பெரும் தியாகம் செய்து மகன்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் என்றார். சிறந்த பொறியாளர்களை மட்டும் அல்லாமல் சிறந்த குடிமகன்களையும் உருவாக்கியுள்ளனர்.
மாணவர்கள் உருவானதன் பின்னணியில் பலரது உழைப்பு உள்ளது. மாணவர் வெற்றிக்கு பின்னால் உள்ள பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்ட பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். உலகின் தொன்மையான மொழிக்கு சொந்தமான தமிழகத்தில் நாம் இருப்பது தனித்துவம் மிக்கது. உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்; இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம்; உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் என்றார்.
தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு, மனித வளம் ஆகியவையே வளர்ச்சிக்கான 3 அடித்தளங்கள்; புதிய தொழில்நுட்பம் ஒருசிலருக்கு அல்ல மாறாக அனைவருக்கும் பயன்அளிக்கும் என்றார். இந்தியாவை சிறப்பான வாய்ப்பு உள்ள நாடாக உலகம் பார்த்துக் கொண்டுள்ளது. 200 வகையான புதிய தொழில்கள் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.