Search This Blog
Monday, September 30, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில் சேர பலத்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களை மருத்துவத் துறை பக்கமே வர விடாமல் செய்யும் முயற்சிதான் இது என்பது உள்ளிட்ட பல்வேறு தக்க காரணங்கள் கூறப்பட்ட பின்னும் அதை புறந்தள்ளி வலுக்கட்டாயமாக நீட் தேர்வை திணித்தார்கள். எந்த தவறும், பிசகும் நடக்காது என்றார்கள். நீட் தேர்வு நடக்கும்போது தமிழகத்தில் வரலாறு காணாத கெடுபிடிகளை காட்டினார்கள். அநாகரீக சோதனைகள் அரங்கேறின. உண்மையிலே மிக நேர்மையாக தேர்வு நடத்தப்படுகிறது என்கிற தோற்றம் வந்தது. ஆனால் எல்லாம் பொய், பித்தலாட்டம் என்பது சீக்கிரமே அம்பலப்படத் தொடங்கிவிட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரியவந்திருக்கிறது. இதற்கு உதவியவர் இவரது தந்தை வெங்கடேசன்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர். மகனை எப்படியாவது டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்கிற வெறியில், 20 லட்சம் லஞ்சத்தைக் கொடுத்து இந்த காரியத்தை செய்திருக்கிறார். இப்போது அப்பாவும் மகனும் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதுமே ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதப்பட்டிருப்பது கொஞ்சம்கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தகுதியானவர்களை தேர்வு செய்கிறோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேர்வு முறை, இப்படி ஒரு அநீதியான செயலை செய்துகொண்டிக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன. துறைசார் வல்லுனர்கள் 4 பேர் இங்கு அலசுகின்றனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
‘நீட்’டுக்கே தண்ணி காட்டும் மாணவர்கள்: பெற்றோரின் பேராசையால் தடம் மாறும் இளம் தலைமுறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.