முக்கியத்துவம் கமில்-இ-திப்-ஒ-ஜராஹத் என்றும் அழைக்கப்படும் யுனானி மருத்துவம் பிரபல கிரேக்க மருத்துவர்களான ஹிப்போகிரட்ஸ் மற்றும் கேலன் ஆகியோரது போதனையால் உருவானது. பெர்சோ-அரபிக் வகையான இந்த மாற்று மருத்துவ முறை, முகலாயர்கள் காலக்கட்டத்தில் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படிப்பு: பேச்சுலர் இன் யுனானி மெடிசின் அண்ட் சர்ஜரி - பி.யு.எம்.எஸ்.,
படிப்பு காலம்: ஓர் ஆண்டு கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.
முதுநிலை படிப்புகள்: பி.யு.எம்.எஸ்., படித்தவர்கள், 14 வகையான பிரிவுகளில் எம்.எடி., அல்லது எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ளலாம்.
நேச்சுரோபதி மற்றும் யோகா நேச்சுரோபதி மற்றும் நவீன மருத்துவம் இரண்டும் ஒருங்கிணைந்த இந்த மருத்துவ படிப்பு தற்போது நாடு முழுவதிலும் சுமார் 250 கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன.
மற்ற அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் &'நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இப்படிப்பிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
படிப்பு காலம்: ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் பயிற்சியுடன் ஐந்தரை ஆண்டுகள்.
பாடப்பிரிவுகள்: உடற்கூறியல், நோயியல், கையாளுதல் சிகிச்சை, உணவியல் மற்றும் சிகிச்சை, அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், உடலியல், மருந்தியல், புனர்வாழ்வு மற்றும் யோகா, சமஸ்கிருதம், தடயவியல் மருத்துவம், நச்சுயியல், உளவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேதா, ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற மாற்றுவ மருத்துவ படிப்புகளுடன் சோவா-ரிக்பா எனும் இமயமலை பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்படும் மருத்துவ முறையையும் அங்கீகரித்துள்ளது. தரம்சாலாவில் உள்ள சென்ட்ரல் கவுன்சில் பார் திபெத்தியன் மெடிசின் இம்முறை மருத்துவ படிப்பை வரைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொத்தம் ஆயிரம் சோவா-ரிக்பா மருத்துவர்கள் தற்போது உள்ளனர்.
விபரங்களுக்கு: www.ayush.gov.in