👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வி.ஏ.ஓ. உள்பட 6491 அரசு பணியிடங்களுக்கு குரூப் - 4 தேர்வு நாளை நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 3000 மையங்களில் 16.30 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
அரசு துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வழியாக நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி கிராம நிர்வாக அலுவலர் நில அளவையாளர் உள்பட எட்டு பதவிகளில் காலியாக உள்ள 6491 இடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் - 4 தேர்வு நடத்தப்படுகிறது.
நாளை நடக்க உள்ள இந்த தேர்வுக்கு ஜூனில் விண்ணப்ப பதிவுகள் நடந்தன; 16.30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 301 தாலுகாக்களில் அமைக்கப்பட்டுள்ள 3000 மையங்களில் நாளை காலை 10:00 மணி முதல் பகல் 1:00 வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக பள்ளி கல்லுாரிகளில் தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள் வருவாய் துறை அதிகாரிகள் ஊரக துறை பணியாளர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்கவும் தேர்வில் 'காப்பி' அடிக்காமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிலையான கண்காணிப்பு படை மற்றும் பறக்கும் படை என 4000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் போலீசார் உள்பட லட்சம் பேர் தேர்வு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் வீடியோ கண்காணிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
காலியிடங்கள் எத்தனை
* வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி - 397
* பிணையமற்ற இளநிலை உதவியாளர் - 2688
* பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் - 104
* வரி வசூலிப்பவர் முதல் நிலை - 34
* நில அளவையாளர் - 509
* வரைவாளர் - 74
* தட்டச்சர் - 1901
* சுருக்கெழுத்து தட்டச்சர் - 784 காலியிடங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரத்து 600 ரூபாய் முதல் 65 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 19 ஆயிரத்து 500 முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U