தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்டகால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 360 இடங்கள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. அதேபோல் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கான 306 இடங்களுக்கு 9,798 பேரும், பிடெக் படிப்புகளான 94 இடங்களுக்கு1,949 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
பரிசீலனைக்குப் பின்னர் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 9,798 பேருக்கும், பிடெக் படிப்புகளுக்கு 1,949 பேருக்குமான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில்இருந்து மாணவ, மாணவிகள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.