சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மதிப்பெண் சலுகை ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 23, 2018

Comments:0

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மதிப்பெண் சலுகை ரத்து


சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, 2 011 முதல், பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. kaninikkalvi.blogspot.com  இந்த நடைமுறையால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்தது. அதனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொது தேர்வு கட்டாயமானது. அப்போது, மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட்டது. 

அதாவது, ஒவ்வொரு பாடத்திலும், அகமதிப்பீடாக, 20 மதிப்பெண்ணும், தேர்வில், 80 மதிப்பெண்ணும் பெற வேண்டும். இவை ஒவ்வொன்றிலும், குறைந்தபட்சம், 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. பின், இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, இரண்டிலும் சேர்த்து, 33 சதவீதம் மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகை, ஓராண்டுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில், குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை கிடையாது என, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. எனவே, இதுபற்றிய விபரத்தை மாணவர்களுக்கு தெரிவித்து, அகமதிப்பீட்டிலும், தேர்விலும் குறைந்த பட்சம், 33 சதவீதம் மதிப்பெண் பெற வைக்க முயற்சிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews