Breaking

Monday, July 23, 2018

முரண்பாட்டின் மொத்த உருவம் உடற்கல்வி துறையா? விதிமுறைகளை மாற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் வேண்டுகோள்.



உடற்கல்வித் துறையை அழிக்க மேல்மட்டத்தில் ஏகப்பட்ட சக்திகள் உள்ளன.அதையும் மீறி வந்தால் பள்ளியில் தலைமையாசிரியர் முதல் OA வரை இடையூறுகள், அதிலிருந்து மீண்டு, போட்டிக்குள் நுழைந்தால்
*ஏகப்பட்ட விதிமுறைகள்
*Under 19 category மாணவன் வயதிருந்தால் Under 17 ல் விளையாடலாம்.
*Under 19 - 2000 ல் பிறந்தவன் கல்லூரியில் இரண்டாமாண்டு பயில்கிறான்
*2001 ல் பிறந்தவன் கல்லூரியில் முதலாமாண்டு பயில்கிறான்
*தற்போது 12 ம் வகுப்பு பயில்பவன் 2002 பிறந்தவன்.
*இவர் அனைவரும் Under 17 ல் விளையாடலாம். இவர்கள் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் 2004ல் பிறந்தவர்களோடு விளையாடவுள்ளனர். இதனால் பாதிக்கப்பட போவது தமிழகத்தில் உயர்நிலை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தான்.
*Under 17 மாணவன் வயதிருந்தால் Under 14 ல் விளையாடலாம்.
*ஆனால் Under 14 மாணவன் வயதிருந்தாலும் Under 11 ல் விளையாட முடியாது.

*கடந்தாண்டு விதிமுறைகள்
*அனைத்து விடுமுறை நாட்களிலும் போட்டிகள், அரையாண்டு தேர்வன்று போட்டிகள்,ஜுனில் ஆரம்பித்து செப்டம்பரில் மாநில போட்டிகள்.
*இந்தாண்டு தொழில்நுட்பத்தோடு விளையாட்டை அழிக்கும் விதிமுறைகள்
*மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் 10 முதல் 20 விதமான விளையாட்டுகளில் பங்கு கொள்வர்
*ஒரு விளையாட்டிற்கு நான்கு நுழைவு படிவம் இரண்டு 8X6 சைஸ் போட்டோ Hand Copy சேர்த்து 3 Photos
*Maxi Print 3 photos Rupees 18
*Cabinet Size 8x6 *3 photos 20x3= Rupees 60
*அரசு பள்ளி தாங்குமா? அனைத்து செலவும் உடற்கல்வி ஆசிரியர் செய்யவேண்டிய நிலை உள்ளது.
*10x60 = Rupees 600
*New Games க்கு Entry Form என்று ஒன்று, அதற்கு Identified Form என்று ஒன்று.
*கேட்க பட்ட தகவல் வேறுவேறா என்று பாருங்கள். ஒரே தகவல்தான் இரண்டிலும் பெயர்,வகுப்பு பிரிவு,EMIS No, Date of Birth, இரண்டிலும் Students கையொப்பம்
*Athletes Form லும் இதே நிலைதான் இரண்டிலும் பெயர், Event Name,identified, Date of Birth
*ஒரு மாணவனை நிரூபிக்க EMIS no, Aadhar No, Body Identity Marks, Photos, Birth Certificate,

*ஒரு மாணவன் விளையாட வருவது குத்தமாய்யா?
*அழிந்துக் கொண்டிருக்கும் விளையாட்டு துறையை காக்க இந்த விதிமுறைகளை தூக்கிவிட்டு, மிக எளிமைபடுத்துங்கள் ஐயா
*அனைத்து விதிமுறைகளும் விளையாட்டை வளர்க்க பயன்பட வேண்டுமே தவிர விளையாட்டை வீழ்த்த அல்ல
*விதிமுறைகள் குறுக்கே நின்றால் அனைவரும் ஒன்றினைந்து விதிமுறைகளை வீழ்த்துவோம் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் விதிமுறைகளை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog