பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு - டிச. 31 கடைசி நாள். Applications invited for the Prime Minister's scholarship – December 31st is the last date.
பிரதமர் கல்வி உதவி தொகைக்கு அழைப்பு
திண்டுக்கல்:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ,தனியார் தொழில் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம், ரூ.2.50 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ம் கல்வியாண்டில் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ்., எண் மூலம் https://umis.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிச. 31 கடைசி நாள். விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆட்சியர்
சென்னை, டிச. 13:
கல்லூரி மாணவர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற வரும் டிச.31-ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப் பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாண வியருக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம், ஆண்டுதோ றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்புபயிலும்மேற்குறிப்பிட்டபிரிவுகளைச் சேர்ந்தோருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. இளநிலை (தொழிற்படிப்பு) முதுநிலை பட்டம், பாலிடெக்னிக் உள் ளிட்ட பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நிகழாண்டில் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவ, மாண விகளுக்கு கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு எண் மூலம் http://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, http://umis.tn.gov.in என்ற ணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைப் பெற வரும் டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களைப் பெற் றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.