ஜனவரி 25-ல் சிமேட் தேர்வு: என்டிஏ அறிவிப்பு CMAT exam on January 25: NTA announcement
நாடு முழுவதும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர, பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் (சிமேட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
ஆண்டுதோறும் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) கணினி வழியில் நடத்துகிறது. இந்த ஆண்டு சிமேட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த அக்டோபரில் வெளியானது. அதை தொடர்ந்து, இணையதள விண்ணப்ப பதிவு அக்டோபர் 17 முதல் நவம்பர் 25-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 25-ம் தேதி சிமேட் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறியலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.