TET விவகாரம் - ஆசிரியர்களின் நலன் காக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
ஆசிரியர்கள் நலம் காக்கப்படும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எடுத்து டெட் தேர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீரய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக நேற்றைய தினம் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் பல்வேறு சங்க பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது
TET விவகாரம் - ஆசிரியர்களின் நலன் காக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி TET issue - Teachers' welfare will be protected - Chief Minister Stalin assures
நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு
TET தேர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஆலோசனைக்குப் பின் ஆசிரியர்களின் நலன் காக்க தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.11.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து, 2011-ஆம் ஆண்டிற்கு முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார். அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பி. வில்சன் அவர்கள் உடனிருந்தார்.
Search This Blog
Saturday, November 22, 2025
Comments:0
Home
Anbil Mahesh poiyamozhi
Chief Minister M. K. Stalin
Chief MK Stalin
CM Stalin
TET EXAM
TET விவகாரம் - ஆசிரியர்களின் நலன் காக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
TET விவகாரம் - ஆசிரியர்களின் நலன் காக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.