அகில இந்திய கவுன்சிலிங்கின் மூன்றாம் சுற்றுக்குப் பிறகு MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு 802 இடங்கள் காலி!!! 802 seats vacant for MBBS and BDS courses after the third round of All India Counselling!!!
அகில இந்திய கவுன்சிலிங்கின் மூன்றாம் சுற்றுக்குப் பிறகு MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு 802 இடங்கள் காலியாக உள்ளன.
1. தமிழ்நாட்டில் 136 இடங்கள் காலியாக உள்ளன.
2. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்தவை.
3. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 22 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.
4. அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப சிறப்பு கவுன்சிலிங் நடத்தப்படும்.
அகில இந்திய கலந்தாய்வின் 3 சுற்று முடிவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 802 இடங்கள் காலி
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3 சுற்று முடி வில் 802 இடங்கள் காலியாக உள்ளன. இதுவரை தமிழகத்தி லும் 3 சுற்று கலந்தாய்வு முடிந் துள்ள நிலையில், 136 இடங் கள் நிரம்பாமல் உள்ளன. இந்த இடங்களுக்கு சிறப்பு கலந் தாய்வு நடத்தப்பட உள்ளன. நாடு முழுவதும் அரசு மருத் துவ, பல் மருத்துவக் கல்லூரி களில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத் திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத் திய அரசின் சுகாதார சேவை களுக்கான தலைமை இயக்கு நரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்து வக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வரு கிறது. இதுவரை 3 சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 802 இடங்கள் காலி யாக உள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 136 இடங்கள்
இதுவரை தமிழகத்திலும் 3 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 136 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அதில், 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவையாகும்.
அதேபோல, அரசு மருத்து வக் கல்லூரிகளில் 22 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய அளவிலும், மாநிலத்திலும் காலியாக உள்ள இடங்கள் சிறப்புக் கலந்தாய்வு நடத்தி நிரப்பப்பட உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.