மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் vacant positions in the District Youth Justice Committee. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 09, 2025

Comments:0

மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் vacant positions in the District Youth Justice Committee.



பெரம்பலூர் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் You can apply for vacant positions in the District Youth Justice Committee.

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மிஷன் வாட்சாலயா (Mis-sion Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் கலந்த ஒரு கணினி இயக்குபவர் தற்காலிக பணி யிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதால் அதற்கு கல்வி தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த ஊதியமாக ஒரு மாதத்திற்கு ரூ. 11,916 வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தினை https://perambalur. nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 10.11.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்.106F/7 தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் - 621 212 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews