ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: கிராம உதவியாளர் (Village Assistant)
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 35,100
தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், பிசிஎம், எம்பி பிரிவினர்கள், எஸ்சி, எஸ்டி, எஸ்டிஏ, எஸ்டி பிரிவினர்கள் 37-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி,இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nagapatinam.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 14.08.2025 அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்ட அலுவலகம், திருக்குவளை.
விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களை தங்களது கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Search This Blog
Saturday, August 16, 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.