ஆசிரியருக்கு காப்பீட்டு தொகை 50 சதவீதம் கூட கிடைக்கல - புதிய மருத்துவ திட்டத்திலும் தொடருது அதிருப்தி
ஆசிரியர், அரசு ஊழியர்க ளுக்கு தற்போது நடைமுறை யில் உள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் (என்.எச்.ஐ.எஸ்.) சிகிச்சை யின்போது 30 சதவீதம் காப் பீட்டு தொகை கூட கிடைக் கவில்லை' என அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் 10 லட்சத் திற்கும் மேற்பட்ட ஆசிரியர் கள், அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் இந்தாண்டு ஜூனில் முடி வுக்கு வந்தது. இதன் பின் ஓராண்டு அத்திட்டத்தை நீட் டித்து அரசு உத்தரவிட்டது. பழைய கிட்டத்தில் எதுவும் மாறாமல் குறிப்பாக கட்ட ணமில்லாத சிகிச்சை என் பதையும் குறிப்பிட்டு புதிய திட்டத்திற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி ஆசிரியர், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் மாதம் தலா ரூ.300 இத்திட் டத்திற்காக பிடித்தம் செய் யப்படுகிறது. ஓய்வூதியர்கள் ரூ.493 செலுத்துகின்றனர். சிகிச்சை இத்திட்டத்தில் பெறுவோர்கண் சிகிச்சைக்கு (ஒரு கண்) ரூ.30 ஆயிரம்,
கர்ப்பப்பை அகற்றும் சிகிச் சைக்கு ரூ.30 ஆயிரம் தவிர பிற எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும் முழுமையான காப்பீட்டு தொகை கிடைப் பதில்லை என அரசு ஊழியர் கள் புலம்புகின்றனர்.
குறிப்பாக புதிய மருத் துவ காப்பீட்டு திட்டத்தி லும் மருத்துவமனைகள் பேக்கேஜ் நடைமுறை பின் பற்றப்படுகின்றன. இதுதொ டர்பான முழுத் தகவல்கள் சிகிச்சை பெறுவோருக்கு தெரிவதில்லை என குற்றச் சாட்டு எழுத்துள்ளது. கேள்விக்குறியாகிறது
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை செயலா ளர்சீனிவாசன் கூறியதாவது:
பழைய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கருத்துக் கேட்ட பின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் நடக்கவில்லை. கண்புரை சிகிச்சை, கர்ப்பப்பை நீக்கம் ஆகிய இரண்டு தவிர இத் திட்டத்தில் வரையறுக்கப் பட்ட நோய்க்கான சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு எவ் வளவு காப்பீட்டுத் தொகை என்பது மர்மமாக உள்ளது. இவ்விஷயத்தில் சம்பந் கப்பட்ட மருத்துவமனை என்ன சொல்கிறதோ அதை நான் நாங்கள் கேட்க வேண்டியுள்ளது. இதனால் சிகிச்சைக்கு அதிகபட்சம் 50 சதவீதம் தொகை கூட கிடைப்பதில்லை. இதுகு றித்து சம்பந்தப்பட்ட இன் சூரன்ஸ் அதிகாரிகளிடம் கேட்டால் 'இந்த நோய்க்கு இவ்வளவு தான் பேக்கேஜ்' என ஒற்றை வரியில் கூறு கின்றனர். ஆனால் அரசு உத்தரவில் நுாறு சதவீதம் கட்டணமில்லா சிகிச்சை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பல மருத்துவமனைகளில் முன் பணம் கட்டாயம் செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் இத்திட்டம் கேள்விக்குறி யாகி வருகிறது. எனவே பேக்கேஜ் முறையை ரத்து செய்து, அரசாணையில் உள் ளது போல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட் டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.