'கோர் இன்ஜினியரிங்' படித்தால் வாழ்க்கை சிறக்கும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 05, 2025

Comments:0

'கோர் இன்ஜினியரிங்' படித்தால் வாழ்க்கை சிறக்கும்!

'கோர் இன்ஜினியரிங்' படித்தால் வாழ்க்கை சிறக்கும்!



பிரகாசமான வேலை வாய்ப்பு, உயர்கல்வி, சுய தொழில் போன்ற காரணங்களுக்காகவே, இன்றைய மாணவ, மாணவிகள் இன்ஜினியரிங் படிப்புகளை பெரிதும் தேர்வு செய்கின்றனர். ஒவ்வொரு மாணவரது எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டு, அத்தகைய இலக்கை அடைய இன்றைய கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும்.

அந்தவகையில், எங்கள் கல்வி நிறுவனத்தில் முதலாமாண்டு முதலே மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்பையும், இலக்கையும், திறன்களையும் அறிந்து அதற்கேட்ப பயிற்சிகளை வழங்குகிறோம். சிறப்பு மதிப்பீட்டு தேர்வு வாயிலாக இலக்குகளுக்குரிய பண்புகள் அவரவரிடம் உள்ளனவா, என்பதை அடையாளம் காண்கிறோம். வேலை வாய்ப்பில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு, 'கோடிங்', 'ஹேக்கத்தான்' போன்றவற்றிற்கான பயிற்சி அளிக்கிறோம். மாலை நேரங்களில் வீட்டில் இருந்துகொண்டே பயிற்சி பெறும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். 'கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்' குறித்த சிறப்பு பயிற்சியையும் கூடுதலாக வழங்குகிறோம். உயர்கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கு 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட்', 'காமன் அட்மிஷன் டெஸ்ட்' போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்குகிறோம். 'ஸ்டார்ட்-ஆப்' துவங்குவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, தொழில்முனைவோருக்கான பிரத்யேக பயிற்சி அளிக்கிறோம். நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகள் மட்டுமின்றி, ஜாப்பனீஷ், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழி பயிற்சியையும் வார இறுதிநாட்களில் வழங்குகிறோம். 'தொடர் பயிற்சி மற்றும் கற்றல் வாயிலாகவே இலக்குகளை அடையமுடியும்' என்பதையும் மாணவர்களை உணர செய்கிறோம்.

டேட்டா மைனிங், ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், 3டி பிரிண்டிங் உட்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கும் வகையில் ஆய்வகங்களை ஏற்படுத்தி உள்ளோம். துறை சார்ந்த தொழில்நிறுவனங்களுடன் இணைந்து பிரத்யேக பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

பாடப்பிரிவுகளை தேர்வு செய்கையில், நவீன தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். குறிப்பாக, மாணவிகள் 'கோர் இன்ஜினியரிங்' துறை சார்ந்த படிப்புகளை படித்தால் சிறந்த வாய்ப்புகளை பெறலாம். சிறந்த எதிர்காலத்தை பெற முடியும்.

'குறிப்பிட்ட படிப்பு தான் சிறந்தது' என்று எவர் ஒருவர் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டாம்; நண்பர்களின் ஆதிக்கத்தாலும் ஒரு பாடப்பிரிவை தேர்வு செய்யக்கூடாது என்பது எனது கருத்து. மாணவ, மாணவிகள் என்ற பாகுபாடின்றி அனைவரும் அவரவர்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

- இந்து முருகேஷன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, கோவை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews