தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி - புதுசா கற்று தரும் AI - ஈஸியாகும் கற்றல், கற்பித்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 10, 2025

Comments:0

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி - புதுசா கற்று தரும் AI - ஈஸியாகும் கற்றல், கற்பித்தல்!



தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சி - புதுசா கற்று தரும் AI - ஈஸியாகும் கற்றல், கற்பித்தல்!

செயற்கை நுண்ணறிவு டூல்கள் அரசு பள்ளி ஆசிரியர்களை மேலும் பட்டை தீட்டி வருகிறது. இவர்கள் தங்களுக்கு விருப்பமான பயிற்சிகளை பெறுவதுடன், மாணவர்களுக்கு கற்று தரவும் ஏஐ உதவியை நாடி வருகின்றனர்.

கல்வியில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு புதிய புரட்சியை உண்டாக்கி இருக்கிறது. நேரடியாக பார்க்க முடியாத பல விஷயங்களை கண் முன்னால் கொண்டு வந்து சாத்தியப்படுத்தி உள்ளது. வர்ச்சுவல் ரியாலிட்டி ஆசிரியர்கள் கற்பித்தலில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகளில் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள புதிய ஏஐ டூல்கள் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏஐ அனுபவம்

இதுபற்றி சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் முத்துவேல் என்பவரிடம் கேட்கையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து பாடங்களையும் மிகவும் நுணுக்கமாக புரிந்து கொள்ள உதவுகிறது. கணிதத்தில் முப்பரிமாண வடிவங்கள், சிக்கலான கணக்குகளை தீர்க்கும் வழிமுறைகள், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் கணக்கீடுகள், சிவில் எஞ்சினியரிங் துறையில் கணிதத்தின் பங்கு எனப் பல விஷயங்களை மாணவர்களுக்கு எளிதாக கற்று தரப்படுகிறது.

செய்முறை கல்வி மூலம் பயிற்சி

இவற்றை நேரில் சென்று பார்ப்பது இயலாத காரியம். அதை ஏஐ செயல்படுத்தி காட்டியுள்ளது. இதன்மூலம் நாங்களும் நிறைய கற்றுக் கொள்கிறோம். வெறும் ஏட்டுக் கல்வியை தாண்டி செயல்முறை அறிவாக மாறும் போது மனதில் நன்கு பதிந்து விடுகின்றன என்று கூறினார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து வந்துள்ளனர். கேமிங் முதல் வார்த்தை உச்சரிப்பு வரை

குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பால என ஐந்து வகை நிலங்களை வர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் மாணவர்கள் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட் கிளாஸ் ரூமில் கர்சிவ் ரைட்டிங் கற்று தருவது முதல் ஓவியம் வரைதல் வரையிலும், கேமிங் உருவாக்கம் முதல் வார்த்தைகள் உச்சரிப்பை சரியாக கையாள்வது வரை பலவற்றை கற்று தருவதாக கூறுகின்றனர். இதற்காக சில டூல்களையும் பயன்படுத்துவதாக பகிர்ந்துள்ளனர்.

பிளாட்பார்ம்கள் பயன்பாடு

MIT App Inventor, Educandy - கேம்ஸ், குறுக்கெழுத்து போட்டி மூலம் கேள்விகளை உருவாக்குவது

Suno AI - ஆடியோக்கள் உருவாக்குவது, இதனை பாடல்களை மாற்றுவது

ReadingEggs - வார்த்தைகளை எப்படி உச்சரிப்பது என்று கற்று தருகிறது

Runway.ai, Leonardo.AI, Filky.ai - வீடியோக்கள் உருவாக்க பயன்படுகிறது

WebXR - ஏ.ஆர் கன்டென்ட் உருவாக்குகிறது

Lumi Education - கேம்ஸ் உருவாக்க முடிகிறது யுனிவெர்சல் டீச்சர்ஸ் அகாடமி வழிகாட்டுதல்

அரசு பள்ளி ஆசிரியர்கள் தனித்தனியே செயல்படாமல் UTA எனப்படும் யுனிவெர்சல் டீச்சர்ஸ் அகாடமி என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைந்த பிளாட்பார்ம் மூலம் கற்று கொள்கின்றனர். இதில் இணைந்துள்ள ஆசிரியர்கள் தங்களது அறிவை ஒருவருக்கொருவர் பகிர்வது மட்டுமின்றி, மாணவர்களுக்கு கற்பிக்கவும் புதிய விஷயங்களை கற்று கொள்கின்றனர். ஆப் டெவலப்மெண்ட் விஷயத்தில் கவனம் செலுத்தி சில மொபைல் ஆப்களையும் உருவாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏஐ மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல்

சிலர் புத்தகங்களை உருவாக்கும் ஏஐ மூலம் மாணவர்கள் சிக்கலான பாடக் கருத்துகளை எளிதாக கற்று கொள்ளும் வகையில் வழிமுறைகளை ஆசிரியர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டி கற்று கொள்வதற்கு கேம்ஸ் உருவாக்கவும் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படியான செயல்பாடுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பினருக்குமே பயனுள்ளதாக மாறி வருகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews