NMMS Exam 2025 - ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 17, 2025

Comments:0

NMMS Exam 2025 - ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

NMMS


NMMS Exam 2025 - ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில் மதுரை மாவட்டத்தில் 414 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4வது இடம் பெற்றுள்ளனர்.

ஒரே பள்ளியில் 105 மாணவர்கள் தேர்ச்சி என்.எம்.எம்.எஸ்., தேர்வில் 3வது ஆண்டும் சாதனை புரிந்துள்ளனர் ஆண்டுதோறும் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாண வர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை. இந்தாண்டு மாநில அள மாணவர்களின் இடை வில் 2 லட்சத்திற்கும் மேற் நிற்றலை தவிர்க்கும் வகை பட்டோர் இத்தேர்வை எழுதினர். இதில் 6,695 பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில தேர்ச்சியில் 4வது இடம் பெற்ற மதுரையில் 414 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் செயின்ட் மேரீஸ் மேல்நிலை பள்ளியில் 140 பேர் எழுதியதில், 105 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித் தனர். இதில் வசந்த்குமார் 180க்கு 157 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2 வது இடம் பெற்றார். சந்தோஷ் குமார் 149 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2 வது இடம் வென்றார்.

சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது: கடந்தாண்டு 296 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு என தனிப் பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730585