செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 02, 2025

Comments:0

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

dinamani%2F2025-04-01%2F8rm01kqw%2Fghibli
செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?

செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி? என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

இணைதளவுலகில் எங்கும் ‘ஜிப்லி’மயமாக அலைவீசிக் கொண்டிருக்கிறது. சின்னச்சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் தன்னகத்தே இழுத்துக்கொண்டுள்ள இந்த ஜிபிலி ஸ்டைல் புகைப்படங்கள் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம். எதுவாக இருந்தாலும் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என்று அனைவருமே இந்த ஜிபிலி ட்ரெண்டில் இணைந்திருக்கின்றனர். இந்த வகை ட்ரெண்ட் நமது பிரதமர் முதல் எலான் மஸ்க் வரையும், ஏன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரையும் பரவியிருக்கிறது.
dinamani%2F2025-04-01%2Flhssgemw%2Fchat_gpt_5
எங்கு தொடங்கியது இந்த ஸ்டூடியோ ஜிபிலி?

ஜப்பானிய அனிமேட்டரான ஹயாயோ மியாசாகி தான் இந்த ஸ்டூடியோ ஜிப்லி வகை அனிமேஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டவர். 83 வயதான ஹயாயோ மியாசாகி தனது கைவண்ணத்தின் மூலம் இதுவரை வெறும் 13 அனிமேசன் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார்.

ஸ்டுடியோ ஜிப்லி என்பது 1985 இல் மியாசாகி ஹயோ, தகஹடா இசாவோ மற்றும் சுசுகி தோஷியோ ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட ஸ்டுடியோ ஆகும்.

அனைவரும் ஒரு திருவிழா போல கொண்டாடும் இந்த ட்ரெண்டில் நாம் இணைந்துகொள்ள வேண்டும் நினைப்பவர்கள் எவ்வாறு இந்த ஜிபிலி புகைப்படங்களை உருவாக்குவது என்பதைப் பற்றி நாம் இங்கு காண்போம். சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ, எக்ஸின் க்ரோக் ஏஐ ஆகியவற்றின் மூலம் ஜிபிலி படங்கள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வைரலாகின. இவற்றை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி காணலாம்.

இந்த ட்ரெண்டில் இணைவதற்காக பழத்தில் மொய்க்கும் ஈ போல அனைவரும் சாட் ஜிபிடியில் உலா வருவதால் பலரும் தங்களுக்கான புகைப்படங்களை மாற்றமுடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சாட் ஜிபிடி பயன்படுத்துவதால், நாங்கள் உறக்கமில்லாமல் தவிக்கிறோம் என்று சாட் ஜிபிடி நிறுவனரே விரக்தியடைந்திருக்கிறார்.

சரி அதுபுறம் இருக்கட்டும் எவ்வாறு ஏஐ-ஐ பயன்படுத்துவது அதிலிருந்து ஜிப்லி படங்களை உருவாக்குவது என்பதைப் பற்றி ஒவ்வொரு படிநிலையாக கற்றுக்கொள்ளலாம்.
dinamani%2F2025-04-01%2Fj87md7kn%2Fchat-gpt-4
ஏஐ செயலிகள்...

படி நிலை- 1: முதலில் போன் அல்லது கணினியில் கூகுள் பிளே ஸ்டோரில் சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினி செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் அல்லது சாட் ஜிபிடி.காம் இணையதளத்தில் சென்று பயன்படுத்தலாம்.

படிநிலை-2: பதிவிறக்கம் செய்தபின்னர் உங்கள் கூகுள் இமெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.

படி நிலை-3: புகைப்படங்கள் போன்று இருக்கும் ஆப்சனை கிளிக் செய்தபின்னர் photoes- என்ற ஆப்சனையும் கிளிக் செய்ய வேண்டும்.
dinamani%2F2025-04-01%2F0yo4wb7v%2Fais


படிநிலை-4: உங்கள் கேலரியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அதில் பதிவேற்றிவிட்டு “Create a Studio Ghibli-style anime art” என்று பதிவிட்டு அம்புக்குறி போன்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

அவ்வாறு செய்துவிட்டு சிறிதுநேரம் காத்திருந்தால், அனைவரும் பயன்படுத்தும் படி நாமும் ஜிபிலி ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்க முடியும். [கூடுதல் தகவலாக ‘Studio Ghibli-style’ என்பதை மாற்றி நாம், goldy aura, marvel, pixar, caricature, lego போன்ற வார்த்தைகளை மாற்றி வெவ்வேறு புகைப்படங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.]

இதேபோன்ற வழிமுறையில் ஜெமினி, க்ரோக் போன்ற ஏஐ-யிலும் நாம் நமது புகைப்படங்களை மாற்றிக்கொள்ள இயலும். சாதாரண புகைப்படம் மட்டுமின்றி உங்களுக்குத் தேவையான புதிய ஸ்டைலையும் இதில் பெற்றுக்கொள்ளமுடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews