Government Order issued providing a special opportunity (Grace Chance) to students with arrears in polytechnic exams! - பாலிடெக்னிக் தேர்வுகளில் நிலுவை (Arrears) வைத்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளில் பங்கேற்க சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்கி அரசாணை வெளியீடு!
தொழில்நுட்பக் கல்வி - பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் பட்டயத் தேர்வு -பட்டயப் படிப்பு முடித்து, நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு, தேர்வு எழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளை முடித்து, தேர்ச்சி பெறாமல் நிலுவைப் பாடங்கள் வைத்துள்ள மாணாக்கர்களுக்கு ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத்தேர்வுகளின் போது மட்டும் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்குதல் மற்றும் தேர்வுக்கட்டணம் நிர்ணயம் செய்தல் ஆணைகள் வெளியிடப்படுகிறது
உயர்கல்வி (பி1)த் துறை அரசாணை (நிலை) எண். 41 : 14.03.2025
ஸ்ரீ குரோதி வருடம், மாசி-30 திருவள்ளுவர் ஆண்டு 2056 படிக்கப்பட்டவை:
1 அரசாணை (டி) எண்.14 உயர்கல்வி(பி1)த் துறை, நாள் 23.01.2025
2. அரசாணை (டி) எண்.326, உயர்கல்வி(பி1)த் துறை, நாள் 22.09.2016
3. அரசாணை (டி) எண்.335, உயர்கல்வி(பி1)த் துறை, நாள் 09.11.2017
4. அரசாணை (நிலை) எண்.153, உயர்கல்வி(பி1)த் துறை, நாள் 12.06.2019
5. அரசாணை (நிலை) எண்.157, உயர்கல்வி(பி)த் துறை, நாள் 10.08.2021
6. தேர்வு வாரியத் தலைவர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அவர்களின் கடிதம் e-file DOTE/88/2025-M1. 31.01.2025. ஆணை:
மேலே முதலாவது முதல் ஐந்தாவது வரை படிக்கப்பட்ட அரசாணைகளில் பட்டயக் கல்வியை முடித்து, தேர்வு எழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் முடித்து, தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்கள் (Arrears) வைத்துள்ள மாணாக்கர்களுக்கு முறையே ஏப்ரல் 2015, அக்டோபர் 2015, அக்டோபர் 2016, ஏப்ரல் 2017, ஏப்ரல் 2018, அக்டோபர் 2018, அக்டோபர் 2019, ஏப்ரல் 2020, ஏப்ரல் 2021, அக்டோபர் 2021, ஏப்ரல் 2022 மற்றும் அக்டோபர் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
2 மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அவர்கள் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள மாணாக்கர்கள், அந்நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்காக எதிர்வரும் பருவத் தேர்வுகளில் கலந்து கொள்ள தங்களுக்கு வாய்ப்பினை வழங்குமாறு அவ்வியக்ககத்திற்கு கோரிக்கைகள் வருகின்றன என்றும், மாணாக்கர்களின் நலன் கருதி, எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது மட்டும். பட்டயக் கல்வியினை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணாக்கர்களுக்கு சிறப்பு வாய்ப்பின் (Grace Chance) மூலம் தேர்வு எழுதவும், அத்தேர்வினை எழுதும் மாணாக்கர்களுக்கு மட்டும் கீழ்க்கண்டவாறு தேர்வுக் கட்டணத்தினை நிர்ணயம் செய்தும் அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 3. கவனமுடன் தொழில்நுட்பக் கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவரின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து மாணாக்கர்களின் நலன் கருதி பின்வருமாறு ஆணையிடுகிறது:.
i) பட்டயக் கல்வியினை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணாக்கர்களுக்கு ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது மட்டும் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்கப்படுகிறது.
ii) சிறப்பு வாய்ப்பின் மூலம் பட்டயத் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு சிறப்பு வாய்ப்பிற்கான (Grace Chance) பதிவு கட்டணமாக ரூ.750/-யையும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணமாக ரூ.40/-யையும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.30/-யையும் மற்றும் ஒரு பாடத்திற்கான தேர்வு கட்டணமாக ரூ.65/-யையும் வசூலிக்க தொழில்நுட்ப கல்வி இயக்கக வாரியத் தலைவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.