TN Budget: 5 big announcements for government employees- TN Budget : அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்
* கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட EL விடுப்பு பணம் பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது .
* சென்னையில் T110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு .
* அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் F1 கோடி விபத்து காப்பீடு .
* அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக 5 லட்சம் வங்கி நிதியுதவி .
* பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன
அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்
அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவியாக வங்கிகள் வழங்கும்
*விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் மகளின் உயர் கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கிடும்.
*►அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வங்கிகள் வழங்கிடும்.
*தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.