எஸ்.எஸ்.எல்.சி. , தேர்வு 28 ம் தேதி துவக்கம் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு 28ம் தேதி துவக்கம் சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 28ம் தேதி துவங்குகிறது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற சிறப்பு வகுப்புகள் நடத்த உத் தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும்28ம் தேதி எஸ்.எஸ்.எல். சி., தேர்வுகள் துவங்குகிறது. இதனையொட்டி கற்றல் பின் தங்கிய மாணவர்களுக்கு தனி கவ னம் செலுத்தி அனைவரும் தேர்ச்சி அடைய தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண் டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல்நிலை பொது தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப் புகள் நடத்த வேண்டும். பொது தேர்வு மையங் களாக செயல்படாத பள்ளிகள் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது.
தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண் டும் என்பதை தலைமையாசிரியர்கள் மனதில் கொண்டு பாட ஆசிரியர்களுக்கும் அறிவுரை கள் வழங்கி எந்தவித தொய்வும் இல்லாமல் கற்றல் பணி நடத்த வேண்டும்.
6ம் வகுப்புமுதல் 8ம் வகுப்பு வரை சிறப்பாக நடத்த தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.