TNPSC மூலம் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 25, 2025

Comments:0

TNPSC மூலம் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சர் தகவல்

tnpsc


TNPSC மூலம் ஒரு லட்சம் பணியிடங்கள்; அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜனவரி 2026 க்குள் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்றவர்களுக்கு நியமன உத்தரவு, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பரிசுத்தொகை, 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: இந்தியாவிலே அதிக அளவிலான மாணவர்கள் உயர் கல்வி படிப்பது தமிழ்நாட்டில் தான். படித்த இளைஞர்களை அரசு பணிகளில் அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ஒரு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவர உள்ளது என்றார்.

வேலைவாய்ப்பு மண்டல இயக்குனர் திருமலைச்செல்வி, திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் பிரபாவதி, நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews