Common Management Admission Test - மேலாண்மை படிப்புகளுக்கான ‘சிமேட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 15, 2025

Comments:0

Common Management Admission Test - மேலாண்மை படிப்புகளுக்கான ‘சிமேட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு

1350905


மேலாண்மை படிப்புகளுக்கான ‘சிமேட்’ தேர்வு முடிவுகள் வெளியீடு

CMAT 2024 exam was conducted on May 15, 2024 and the CMAT2024 result has been declared today (June 6). Candidates can download their scorecards from the official website of CMAT 2024 by using their login credentials.

எம்பிஏ உட்பட மேலாண்மை படிப்பு​களுக்கான சிமேட்' நுழைவு தேர்வு முடிவுகளை என்டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாட்​டில் உள்ள மத்திய உயர்​கல்வி நிறு​வனங்​கள், அகில இந்திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மத்​தின்​கீழ் (ஏஐசிடிஇ) இயங்​கும் கல்லூரி​களில் மேலாண்மை படிப்பு​களில் சேர சிமேட்' எனப்​படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்​வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்​டும்.

தேசிய தேர்​வுகள் முகமை (என்​டிஏ) சார்​பில் இந்த தேர்வு ஆண்டு​தோறும் இணைய​வழி​யில் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, நடப்​பாண்​டுக்கான சிமேட் தேர்வு கடந்த ஜன.25-ம் தேதி நாடு முழு​வதும் 178 மையங்​களில் நடைபெற்​றது. பதிவு செய்திருந்த 74,012 பேர் 63,145 (85.3%) பேர் மட்டுமே தேர்​வில் பங்கேற்​றனர். இந்த தேர்​வுக்கான இறுதி விடைக்​குறிப்பு சமீபத்தில் வெளி​யானது. அதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளி​யிட்​டுள்​ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் /exams.nta.ac.in/CMAT/ என்ற இணையதளத்​தில் சென்று அறிந்து கொள்​ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்​பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கூடுதல் விவரங்களை nta.ac.in எனும் வலைதளத்​தில் அறிய​லாம் என்று என்டிஏ வெளி​யிட்ட அறிவிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. சிமேட் தேர்​வில் வெற்றி பெற்​றவர்கள் நாடு முழு​வதும் உள்ள உயர்​கல்வி நிறு​வனங்​களில் மேலாண்மை படிப்பு​களில் சேரலாம் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84620755