Insistence on providing free medical treatment under the Government Employees Medical Insurance Scheme - அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க வலியுறுத்தல்
அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு மருத்துவக்காப்பீட்டுத்திட் டத்தின் கீழ் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய நடவடிககை மேற்கொள்ள வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய் வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ 300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021ஐ செயல்ப டுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனை டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 19.2021 முதல் மேலும் இரண்டு தனி யார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் மூன்றாம் நபர் ஒப்பந்தம் செய்து இத் திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு வழங்கியுள்ளது. இதனால் சிகிச்சை பெரும் ஆசிரியர்கள் சிகிச்சை செலவுத் தொகையை பெறுவதில் மிகப்பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர் எனவே அரசாணைக்கு முரண்பா டாக உள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது அரசு ஆணைப்படி சிகிச்சைக் கான முழு கட்டணத்தையும் வழங்கு நில்லை மாறாக காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான மொத்தத் தொகையில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டும் வழங்குவது என்ற நடைமு றையை கடைப்பிடித்து வருகிறது. இத னால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது சிகிச்சை பெறும் சூழலில் காப்பீட்டு நிறுவனம் அளித்த தொகை போகமீதி பணத்தை நோயாளிகளைக் கட்டச் சொல்வது, அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்க ளில் மருத்துவமனை நிர்வாகங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழக அரசின் உன்னத திட்டமான புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட் டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.