Extension of deadline to apply for UPSC exam - UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்
சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை முடிவடைகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்ரவரி 21) நிறைவு பெறுகிறது.
விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.