'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"தேசிய கல்விக்கொள்கையை ஒரு மாநிலம் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது சரியல்ல.
உலக அளவில் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பிரபலப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டையும் பிற பகுதிகளையும் இணைக்கும்விதமாக காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி உள்ளிட்டவை மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
திருக்குறள் 13 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரதமர் மோடி அதனை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை உலகளவில் கொண்டு செல்வதில் மத்திய அரசு பங்கெடுத்து வருகிறது.
உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.
தேசிய கல்விக்கொள்கை மொழி சுதந்திரத் தன்மை கொண்டது.
எந்தவொரு மாநிலத்திலோ அல்லது சமுகத்திலோ எந்தவொரு மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு மாணவரும் தாய்மொழியில் தரமான கல்வி கற்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது.
மேலும் மொழியை மாணவர்கள் தேர்வு செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. 1968ல் தொடங்கி இந்திய கல்வித் திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது.
மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.
சமூகம் மற்றும் கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
பல மாற்றங்களுக்கான போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுத்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும்.
இது தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
மாநிலங்கள் கல்வியில் தங்கள் தேவைகளை புகுத்திக்கொள்ளும் அளவிற்கு இந்த கொள்கை நெகிழ்வுத்தன்மை கொண்டது.
மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம், அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நாம் வளர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.