ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு ஜன.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - journalism certificate course. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 04, 2025

Comments:0

ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு ஜன.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - journalism certificate course.



ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து நடத்தும் ஊடகவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சான்றிதழ் படிப்புக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜன.5) விண்ணப்பிக்கலாம் என லயோலா கல்லூரி தெரிவித்துள்ளது.

இது குறித்து லயோலா கல்லூரி வெளியிட்ட அறிவிப்பு: ஊடகத் துறை சாா்ந்து பயில விரும்புவோருக்கு ஊடகவியல் சாா்ந்த சான்றிதழ் படிப்புகள் கட்டணமின்றி நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பயிற்சியில் இதழியல் சான்றிதழ் படிப்பு மட்டும் நடத்தப்பட்டது. நிகழாண்டு கூடுதலாக ஊடகவியலுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சான்றிதழ் பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊடகத்தில் பயன்படுத்தும் திறன் சாா்ந்த பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் இளநிலை பட்ட கல்வி முடிந்த 20 முதல் 25 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை லயோலா கல்லூரியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில், ஊடகத்துறை வல்லுநா்கள் நேரடி பயிற்சி அளிப்பா்.

வாரந்தோறும் பயிற்சி பட்டறை மற்றும் களஆய்வு மேற்கொள்ளப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் ஜன.5-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ற்ண்ய்ஹ்ன்ழ்ப்.ஸ்ரீா்ம்/3ஸ்ரீ3ற்ங்5ந்ஸ்ரீ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews