Government school teacher sentenced to 5 years in prison - அரசு பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
நாமக் கல்லில் அரசு பள்ளியில், 2ம் வகுப்பு மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில், ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நாமக்கல்லில் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
நாமக்கல் ராம புறம்பத்தூர் காலணியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வகுப்பறையில் ஆசிரியை விஜயலட்சுமி அந்த மாணவரை மற்றொரு மாணவரின் மலத்தை அள்ள வைத்து உள்ளார் இதுகுறித்து மாணவரின் தந்தை அப்போதைய நாமக்கல் எஸ்பி செந்தில்குமார் இடம் புகார் அளித்தார் இதுகுறித்து நாமக்கல் போலீசார் தீண்டாமை தடுப்பு சட்டத்தின்படி விஜயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் இதை எடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கல்வித் துறை அதிகாரிகள் ஆசிரியை விஜயலட்சுமி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தனர்
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற அமர்வில் நடைபெற்று வந்தது இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தனசேகரன் நேற்று தீர்ப்பு வழங்கினார்
அதில் பள்ளி மாணவரைக் கொண்டு மலம் அல்ல வைத்த ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் இதை எடுத்து விஜயலட்சுமி ஆசிரியை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.