“குழந்தை செப்டிங் டேங்கில் விழவில்லை"- ஆசிரியர் அடித்துக் கொன்றதாக புகார்
விக்கிரவாண்டி பள்ளி மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பமாக குழந்தை செப்டிங் டேங்கில் விழவில்லை, ஆசிரியர் அடித்துக் கொன்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது). இச்சிறுமி அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (தனியார் பள்ளி) எல்.கே.ஜி. படித்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு சென்ற லியாலட்சுமி, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பழனிவேல் புகாரின் பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, வகுப்பு. ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேர் மீதும் 105 பி.என்.எஸ். (கொலை, கொலை ஆகாத மரணம்) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி பள்ளி மாணவி கழிவறை சென்ற சிறுமி, தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆசிரியை அடித்ததால் தனது மகள் உயிரிழந்ததாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.
சிறுமியின் ஆடையில் ரத்தக்கறை இருப்பதாக தாய் சிவசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியை அடித்ததால் தான் சிறுமி மயங்கியதாக உடன் படிக்கும் சிறுமி வாக்கு மூலம் அளித்த ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.