CALL, SMS சேவை: தனி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜியோ, ஏர்டெல் - CALL, SMS service: Jio, Airtel introduce separate recharge plans.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது.
அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும்.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.