ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 09, 2024

Comments:0

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

26255033-anbil-mahesh

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது உண்மை தான். இந்த பணியிடங்களை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Classes-will-be-held-on-Saturdays---Minister-Anbil-Mahesh-Announces

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உடற்கல்வி உதவியாளர் பணி இடங்களுக்கு 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளது. அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3 ஆயிரம் பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது உண்மை தான். இந்த பணியிடங்களை கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84726590