விடைப் புத்தகம் செல்லாததாக்கப்படும் - தேர்வர்களுக்கு TNPSC எச்சரிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வர்கள் விடைப்புத்தகத்தில் தேர்வுக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை எழுதினால் விடைத்தாள் செல்லாதாக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
சப்-கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட உயர் பதவிகளை குரூப் 1 எழுத்துத் தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் நிரப்பி வருகிறது.
இந்நிலையில் தேர்வு எழுதும் தேர்வர்கள் சிலர், குரூப் 1 (முதன்மை தேர்வு), குரூப் “1பி” தேர்வின்போது, கேள்விக்கு தொடர்பில்லாத அல்லது தேர்விற்கு சம்பந்தமில்லாத ஏதாவது கருத்துக்கள் மற்றும் பொருத்தமில்லாதவற்றை தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதுகின்றனர். இவ்வாறு எழுதக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மேலும் விடைப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள பட்டைக்குறியீட்டை சேதப்படுத்துதல், பிற தேர்வர்களின் இருக்கையில் தவறாக அமர்ந்து தேர்வு எழுதுதல், பிற தேர்வர்களின் விடைப்புத்தகத்தை பயன்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்வது கண்டறியப்பட்டால் தேர்வர்களின் விடைப்புத்தகம் செல்லாததாக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.