தட்டச்சு பள்ளிகளின் அரசாணையை ரத்து செய்யுங்க; தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 14, 2024

Comments:0

தட்டச்சு பள்ளிகளின் அரசாணையை ரத்து செய்யுங்க; தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம்



தட்டச்சு பள்ளிகளின் அரசாணையை ரத்து செய்யுங்க; தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம்

தட்டச்சு பள்ளிகளின் நிலை கேள்விக்குறியாகும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்., ஆக., மாதங்களில் இளநிலை,முதுநிலை தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், சுருக்கெழுத்தர், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வுகள் நடைபெறும். தட்டச்சர் பதவிக்கு தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சி.ஓ.ஏ., தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சி.ஓ.ஏ., தேர்வு எழுதுவதற்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் தேர்வில் ஆங்கிலம் அல்லது தமிழில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் அக். 28ல் வெளியான அரசாணையில் அடிப்படை கல்வித் தகுதி 10 ம் வகுப்பு அல்லது அதற்கு சமமானகல்வித்தகுதி என்று மட்டுமே உள்ளது. இது வரை 10 ம் வகுப்பு, தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) இளைநிலை தேர்ச்சி என இருந்தது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என தமிழக வணிகவியல் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கூறியதாவது:தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 4750 தட்டச்சுப் பள்ளிகள் உள்ளன. தட்டச்சில் ஆண்டிற்கு 4 லட்சம் மாணவர்களும், கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்விற்காக ஆண்டிற்கு 40,000 மாணவர்களும் தட்டச்சுப் பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

5,000 ஆசிரியர்களும், 7500துணை ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேலான ஆங்கிலம் , தமிழ் தட்டச்சுப் பொறிகள் செயல்படுகின்றன. 10,000 க்கு மேலான கணினிகளும்உள்ளன. தற்போதைய அரசாணையால் இவற்றின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையில் பயிலாமல் நேரடியாக கணினியில் பயின்றால் விரல்களின் பயன்பாடு குறையும். பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்யும் நிலையும் உருவாகும். தட்டச்சுப் பொறியில் அடிப்படைப் பயிற்சியைப் பெறுபவர்கள் விசைப்பலகையினைப் பார்க்காமல் வேகமாகவும், பிழையின்றியும் தட்டச்சு செய்வர். இதனால் கால விரயம் தவிர்க்கப்படும்.

கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன்பாட வகுப்புகள் 22 ஆண்டு காலமாக இருப்பது போன்று தட்டச்சுப் பள்ளிகளிலேயே அல்லது பாலிடெக்னிக்களிலேயே தொடர்ந்து நடத்தப்படும் என்கிற அறிவிப்பை அளிக்க வேண்டும். புதிய அரசாணையில்இதற்கான குறிப்பு ஏதும் வழங்கப்படவில்லை. எனவே பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும். இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனிடம் மனு அளித்துள்ளோம். அவரும் ஆவன செய்வதாக கூறினார் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews