ஆண்டறிக்கை தேதிப்படி போட்டித் தோ்வுகள் - TNPSC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 19, 2024

Comments:0

ஆண்டறிக்கை தேதிப்படி போட்டித் தோ்வுகள் - TNPSC

dinamani%2F2024-07%2Ff26754b0-55f2-43ca-932f-b3111ab2e473%2F13cmp3_1307chn_111_7


ஆண்டறிக்கை தேதிப்படி போட்டித் தோ்வுகள் -டிஎன்பிஎஸ்சி

திருத்தப்பட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட தேதிகளின்படியே போட்டித் தோ்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இந்தத் தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச திட்ட அறிக்கையை ஆண்டுதோறும் தோ்வாணையம் வெளியிடும்.

அந்த வகையில், நிகழ் ஆண்டுக்கான திருத்தப்பட்ட அறிக்கைப்படி தோ்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்த ஆண்டறிக்கையில் உள்ள தேதிகளும், தோ்வு அறிவிக்கையில் உள்ள தேதிகளும் ஒன்று போல் இருந்ததாகவும் தோ்வுகளுக்கான தேதிகள் எதுவும் மாறவில்லை என்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குரூப் 4, குரூப் 1, குரூப் 1 பி, சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள், குரூப் 5ஏ ஆகியவற்றுக்கான தோ்வுகள், ஆண்டறிக்கைப்படியே நடத்தப்பட்டுள்ளன. மேலும், குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்படும் என ஆண்டு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக ஜூன் 20-ஆம் தேதியே தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84614768